Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (16:33 IST)
தமிழகத்தில் சில கடந்த சில மாதங்களாக மழை மற்றும் குளிர் இருந்த நிலையில் தற்போது கோடை காலம் துவங்க உள்ளது என்பதும் இதனால் கொடை வெயில் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை தெரிவித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் கோடையை எதிர்பார்த்து காத்துக் கொண்டனர். இயல்பை விட  மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் பிப்ரவரி 23 24 ஆகிய தேதிகளில் அதாவது இன்றும் நாளையும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பறந்த வானிலை நிலவும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையை விட இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை இருக்காது என்றும் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வர வெப்பநிலை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். கோடை வெயிலை எப்படி சமாளிப்பது என்பதே மக்களின் பெரும் பிரச்சனையாக உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments