தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2023 (14:59 IST)
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தின் தற்போது கோடை காலம் கிட்டத்தட்ட முடிவடைந்து உள்ள நிலையில் அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 
 
சென்னையில் இன்று காலை 8 மணி வரை வெயில் இல்லை என்பதும்   ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்றும் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் காரணமா?

மாணவர்கள் கேலி.. கண்டிக்காத ஆசிரியர்கள்.. 9 வயது மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

உடல் பருமனாக இருந்தால், நீரிழிவு நோய் இருந்தால் விசா கிடையாது: டிரம்ப் அதிரடி

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments