Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிகாலை முதல் கனமழை: 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தகவல்!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (07:58 IST)
சென்னையில் இன்று அதிகாலை முதல் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது
 
ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் திறக்கப்பட உள்ள நிலையில் இன்று காலை முதல் மழை பெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்றும் இன்று மட்டும் அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments