இன்றிரவு 19 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Siva
வியாழன், 24 ஜூலை 2025 (16:34 IST)
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஜூலை 29ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, இன்று  பின்வரும் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது:
 
வட மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை.
 
தென் மாவட்டங்கள்: தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி.
 
மேற்கு மாவட்டங்கள்: கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி.
 
பொதுமக்கள் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எங்களுக்கு எதிரி இல்லை!.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!..

திடீரென சென்னையை நோக்கி நகரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு எச்சரிக்கை:

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments