Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மேயரை ஒருமையில் பேசினாரா அமைச்சர் கே.என்.நேரு: மேயர் ப்ரியா விளக்கம்

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (09:36 IST)
சென்னை மேயர் பிரியாவை ஒருமையில் பேசியதாக கேஎன் நேரு மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் இதுகுறித்து மேயர் ப்ரியா விளக்கம் அளித்துள்ளார் 
 
சமீபத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கேஎன் நேரு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மேயர் ப்ரியாவை பார்த்து ‘நீ பேசும்மா’  என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியதை அடுத்து அவரை ஒருமையில் பேசி விட்டதாக அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 
 
இது குறித்து விளக்கமளித்த சென்னை மேயர் பிரியா ’அமைச்சர் கே என் நேரு அவர்கள் என் தந்தையைப் போன்றவர், அவர் எப்போதும் என்னை ஒரு மகள் போன்று தான் நடத்துவார். அந்த உரிமையை அவர் பேசியிருக்கலாம், ஒருமையில் பேசுவது உரிமையில் தானே தவிர மரியாதை குறைவாக நான் கருதவில்லை என்று கூறினார்
 
மேலும் சென்னையை பொருத்தவரை எந்த திட்டத்தை வகுத்து எடுத்துச் சென்றாலும் அதற்கு முழு அளவில் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்றும் அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் உள்ளது என்றும் மேற்படி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments