Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூய்மைத் தொழிலாளியை மோசமாகத் திட்டிய நபர் – வலுக்கும் கண்டனங்கள்!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (12:48 IST)
சென்னை பள்ளிக்கரணையில் தூய்மைப் பணியாளரான லாரி ஓட்டுனரை முதியவர் ஒருவர் ஆபாசமாகப் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

சென்னையில் உள்ள பள்ளிகரணை பகுதிக்கு அருகே உள்ள ஐஐடி காலனி 7-வது தெருவில் உள்ள தனியார் குடியிருப்பில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் கழிவுநீர் எடுப்பதற்காக தூய்மைப் பணியாளரான லாரி ஓட்டுனர் மணிகண்டன் என்பவர் சென்றிருந்தார்.

அப்போது சந்திரசேகர் மணிகண்டனிடம் மிகவும் மூர்க்கமாகவும் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவரை திட்டினார். இதனை தனது செல்போன் கேமராவில் படம்பிடித்த மணிகண்டன் சமூகவலைதளங்களில் பரப்பினார். அதைப் பார்த்த பலரும் அந்த முதியவரின் செயலுக்கும் அவரது சாதிய காழ்ப்புணர்ச்சிக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து மணிகண்டன் இது சம்மந்தமாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க, காத வார்த்தையால் கொச்சைபடுத்தும் வகையில் திட்டியது தொடர்பாக 294B என்ற பிரிவீன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

இளம்பெண்ணை துரத்தி வெட்டிய முதியவர்.. அலறிக் கொண்டு ஓடிய பெண்! - அதிர்ச்சி வீடியோ!

கடலில் கவிழ்த்த கப்பல்.. அரபிக்கடலில் பரவும் கந்தக எரிப்பொருள்! - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

பெங்களூரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்..!

கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்! சுற்றுலா தளங்கள் மூடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments