Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு புயல் பாதித்த மாவட்டங்களாக அரசாணை வெளியீடு!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (20:41 IST)
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை புயல் பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
 
சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, சென்னை ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டன. இங்கு பெய்த வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளம் சூழ்ந்து, குடியிருப்புகளை விட்டு மக்கள் வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

தமிழக அரசு துரிதமாகச் செயல்பட்டு மக்களை காப்பாற்றியதுடன் தேவையான அத்தியாவசிய உதவிகள் செய்து கொடுத்தது.

இதேபோல், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய  தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

எனவே தமிழக அரசு மத்திய அரசிடம் நிவாரண உதவி கேட்டுள்ளது.

சமீபத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங்  நேரில் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுச் சென்ற நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும்  தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுச் சென்றார்.

இந்த நிலையில்,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை புயல் பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

அதேபோல், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருது நகர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments