Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாய் ஃப்ரெண்டை பழிவாங்க 21 வெடிக்குண்டு மிரட்டல்!? - சென்னை ஐடி பெண் ஊழியர் அதிரடி கைது!

Prasanth K
புதன், 25 ஜூன் 2025 (13:15 IST)

சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் பெண் ஒருவர் காதலனை பழிவாங்க தொடர்ந்து வெடிக்குண்டு மிரட்டல் விடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த சில காலமாகவே விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுவது, பள்ளி, கல்லூரிகள், அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கு குண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற போலி மிரட்டல் விடுப்பவர்களை சைபர் க்ரைம் போலீஸார் தேடி பிடித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் சமீபத்தில் சில வெடிக்குண்டு மிரட்டல்கள் தொடர்ந்து ஒரு நபரின் இமெயில் ஐடியில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அதை போலீஸார் ட்ரேஸ் செய்தபோது அந்த மெயிலை உருவாக்கியவர் சென்னையை சேர்ந்த ஐடி பெண் ரீனே ஜோசிடா என தெரியவந்துள்ளது.

 

ரோபோடிக் எஞ்சினியரிங் படித்த ஜோசிடா தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஒரு தலையாக இளைஞர் ஒரூவரை காதலித்து வந்த நிலையில் அவர் காதலை ஏற்கவில்லை என் கூறப்படுகிறது.

 

இதனால் அந்த இளைஞரை பழிவாங்க அவரது பெயரில் போலி மெயில் ஐடியை உருவாக்கிய ஜோசிடா கடந்த சில மாதங்களுக்குள் 12 மாநிலங்களில் மொத்தம் 21 வெடிக்குண்டு மிரட்டல்களை விடுத்துள்ளார். 

 

நரேந்திர மோடி மைதானத்திற்கு, ஏர் இந்தியா விமான விபத்திற்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு, அரசியல், மத நிகழ்ச்சிகளுக்கு என பல வகையில் வெடிக்குண்டு மிரட்டல்களை அனுப்பி தள்ளியுள்ளார் ஜோசிடா. அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவலர்கள் அவரை கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு தொகுதியிலும் உங்கள் திருட்டை கண்டுபிடிப்பேன்! - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல்காந்தி சவால்!

வாரத்தின் 2வது நாளிலும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

குடியரசு துணை தலைவர் தேர்தல்.. இந்தியா கூட்டணி வேட்பாளர் இன்று அறிவிப்பா?

தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி! விலங்குகள் நல ஆர்வலர்கள் மீது பொதுமக்கள் கோபம்..!

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் சீனாவுக்கு வரி விதிக்காதது ஏன்? - ட்ரம்ப் உருட்டு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments