Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு பைக் ரேஸூக்கு தடை –உயர்நீதி மன்றம் ஆணை

Webdunia
ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (21:07 IST)
புத்தாண்டின்போது டிசம்பர் 31 ஆம் தேதி பைக் ரேஸுக்கு தடை விதிக்க வேண்டுமென காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கின் விசாரணை நேற்று முன் தினம் நடைபெற்றது. அப்போது மனுதாரார் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் ஒவ்வொரு புத்தாண்டின்போதும், நள்ளிரவில் 650க்கும் அதிகமான விபத்துக்கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் சென்னையில் மெரினா கடற்கரை சாலைபிலும், மதுரையில் டவுன்ஹால் சாலைபிலும், கொடைக்கானலில் அண்ணா சாலையிலும், திருச்சியில் தில்லைநகரிலும், கோவையில் ரயில் நிலையப் பகுதிகளிலும் புத்தாண்டுக்கு முதல் நாள் நள்ளிரவில் பைக் ரேஸ் நடைபெறுகிறது. அதனால் பல விபத்துகள் நடைபெறுகின்றன. இந்த விபத்துகளில் பைக் ரேஸில் ஈடுபடுவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். நானே இதுபோல ரேஸில் ஈடுபடுபவர்களால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ளேன்.

அதனால் பைக் ரேஸுக்கு தடை விதிப்பது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். அதி ஏற்ற நீதிமன்றம் பைக் ரேஸ்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக மாநகரக் காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பவேண்டும் எனவும் நீதிபதிகள்,உத்தரவிட்டனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெல்லை நீதிமன்றம் முன் நடந்த இளைஞர் கொலை.. 5 பேர் கைது..!

இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 480 ரூபாய் உயர்வு..!

கேரள கழிவு விவகாரம் எதிரொலி; குப்பை கொட்டுபவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு!

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி: பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments