Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (10:58 IST)
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன் கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்த மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பட்டியலின மக்கள் குறித்து அவதூறுஜ் கருத்து தெரிவித்ததாக ஆர்எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது 
 
இந்த நிலையில் அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான தீர்ப்பு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது
 
இந்த தீர்ப்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் வழக்கில் ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு.. உடன் வந்த நண்பர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments