Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விலகலா? பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (21:17 IST)
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
 
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக சமீபத்தில்  நியமிக்கப்பட்டார். இதனையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளதால் தஹில் ரமானி அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
 
 
மிகப்பெரிய நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக உள்ள ஒருவர் மேகாலாயா போன்ற சிறிய மாநிலத்தின் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது அசாதாரணமானது என்று சட்ட நிபுணர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் தஹில் ரமானி எதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளார் என்பது குறித்த காரணமும் இதுவரை தெரியவில்லை
 
 
இந்த நிலையில் மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து நீதிபதி தஹில் ரமானி  ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments