Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க இஷ்டத்துக்கு புரளி பேசக்கூடாது.. அறிவியலை நம்புங்க – மன்சூர் அலிகானுக்கு நீதிபதி அறிவுரை!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (12:57 IST)
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர் முன்ஜாமீன் கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது முன்ஜாமீன் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் ரூ.2 லட்சம் டிடியாக அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி குறித்து புரளி பரப்பக்கூடாது, பதற்ற நிலையை ஏற்படுத்த கூடாது அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என மன்சூர் அலிகானுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் எப்போது? முக்கிய அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்திய அணி வெற்றியை கொண்டாடியதில் மோதல்.. வாகனங்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு..!

இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி.. அமளிக்கு தயாராகும் எதிர்கட்சிகள்..!

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை இல்லை: ப சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments