வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க முடியாது! – உயர்நீதிமன்றம் மறுப்பு!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (12:30 IST)
வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்காலிகமானது என்றும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு விரிவான மசோதா நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் அரசின் இந்த உள்ஒதுக்கீடுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்நாட்டு மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்தது. அதில் சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்காமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் ஓபிசி பிரிவினரில் 22 சாதியை சேர்ந்தவர்களுக்கு வெறும் 2.5% மட்டுமே இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றும், அரசியல் லாபத்துக்காக அரசு இதுபோன்ற உள்ஒதுக்கீடுகளை அறிவிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு நிறைவேற்றிய வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments