Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக்கில் பல பெண்களை வளைத்தது இப்படித்தான் : காதல் மன்னனின் காமலீலை

பேஸ்புக்கில் பல பெண்களை வளைத்தது இப்படித்தான் : காதல் மன்னனின் காமலீலை

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (13:42 IST)
சென்னையில் இளம்பெண்களை காதலித்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து விட்டு. அவர்களின் ஆபாச புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வந்த சாமுவேல் என்ற வாலிபர் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. 


 

 
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் கொடுத்த பரபரப்பு புகாரின் பேரில், மயிலாப்பூரை சேர்ந்த சாமுவேல் என்ற வாலிபர் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் தனது காமலீலையை நடத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 
 
அதாவது, பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடும் சாமுவேலுக்கு, ஏராளமான பெண் தோழிகள் இருந்துள்ளனர். எனவே அதில் சாட் செய்து, தன்னை வசதி படைத்தவராக பந்தா காட்டி இளம்பெண்களை மயக்கியுள்ளார். அதன்பின் அவர்களிடம் நெருங்கி பழகி, காதல் வலை வீசுவார். 
 
அவர் வலையில் விழும் பெண்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று, செல்பி எடுப்பது என பல புகைப்படங்கள் எடுத்துக்கொள்வார். அதன்பின், அவர்களை திருமணம் செய்து கொள்வதாய் வாக்குறுதி அளிப்பார். அதை நம்பி ஏமாறும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து, அதை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்துக்கொள்வார். அதன்பின் அவர்களிடம் பணம் கேட்டும் மிரட்டியுள்ளார். மேலும், சில பெண்களின் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
 
அவரது செல்போனில் இருந்து சில பெண்களின் புகைப்படங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த புகைப்படங்கள் பலருக்கு பகிரவும் செய்யப்பட்டுள்ளன. எனவே, சாமுவேலிடம் பழகிய பெண்கள் அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை வைத்துக் கொண்டு, அவர் காமலீலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இதுபோன்ற ஆண்களை பெண்கள் நம்பக்கூடாது என்றும், முகநூலில் அறிமுகம் இல்லாத ஆண்களின் நட்பை பெண்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments