Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் ஆதாரை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்: சென்னை பெண்ணிடம் நூதன மோசடி முயற்சி..!

Mahendran
புதன், 6 மார்ச் 2024 (17:12 IST)
உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தப்பட்டதாக மர்ம தொலைபேசி அழைப்பு தனக்கு வந்ததாக சென்னை பெண் ஒருவர் கூறி அந்த மோசடியில் இருந்து தான் புத்திசாலித்தனமாக தப்பித்ததாக கூறியுள்ளார். 
 
சென்னை பெண் லாவண்யா என்பவர் தனது சமூக வலைதளத்தில் ’உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து சுங்கத்துறை அதிகாரி ஒருவருடன் பேசி அந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளவும் என்றும் அழைப்பு வந்ததாம் 
 
இதனை அடுத்து சில நிமிடங்களில் சுங்கத்துறை அதிகாரி போல் ஒருவர் பேசியதாகவும் உங்கள் ஆதார் எண் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது இதை நீங்கள் சரி செய்ய வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் அந்த பெண் புத்திசாலித்தனமாக இது தொடர்பாக காவல்துறை என்னை தொடர்பு கொண்டால் அப்போது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தொடர்பை துண்டித்து விட்டதாகவும் தெரிவித்தார் 
 
டெல்லியில் இதே போல ஒரு பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வந்த போது அவர் சுமார் 56 லட்சத்தை இழந்தார் மற்றும் ஒரு சிலரும் லட்சக்கணக்கில் எழுந்து உள்ளனர். ஆனால் சென்னை பெண் அந்த செய்திகளை படித்ததால் சுதாரித்துக் கொண்டு இந்த மோசடியில் இருந்து தப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments