சென்னை மின்சார ரயில் போக்குவரத்து தொடங்குவது எப்போது?

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (15:32 IST)
நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் மதியம் ஒரு மணியிலிருந்து மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் மின்சார ரயில்கள் இயங்கும் நேரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
 
நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடந்த நிலையில் தற்போது நிவாரண பணிகளை முடுக்கி விடும் பணியில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஒரு மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள் மீண்டும் எப்போது இயங்கும் என்று பயணிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று பிற்பகல் 3 மணி முதல் புறநகர் சிறப்பு ரயில்கள் சேவை துவங்குகிறது என தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது. முதல்கட்டமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இரு மார்க்கங்களிலும் புறநார் ரயில் சேவை துவங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதன் காரணமாக மின்சார ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் மெட்ரோ ரயில்கள் ஓடத் தொடங்கி விட்டன என்பதும் ஒரு சில பகுதிகளில் பேருந்துகளும் இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே நிவர் புயல் பாதிப்பை மீறி கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு சென்னை திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments