Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் மளிகை பொருட்கள் வாங்க மொபைல் எண்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Webdunia
திங்கள், 31 மே 2021 (07:05 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் மளிகை பொருட்கள் விற்பனைக்கு அனுமதி என்றும் கடையை திறக்காமல் மொபைல் போன் மூலம் ஆர்டர் பெற்று வீட்டிற்குச் சென்று டெலிவரி செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி இதற்கென ஒரு இணைய தளத்தை ஆரம்பித்து அந்த இணையதளத்தில் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள மளிகை கடைகளின் பெயர்கள், சூப்பர் மார்க்கெட்டின்  பெயர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அறிவித்துள்ளது
 
இந்த இணையதளத்திற்கு சென்னை மக்கள் சென்று தங்களுடைய பகுதியை தேர்வு செய்து அந்த பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் அல்லது லோக்கல் கடைகளைத் தேர்வு செய்து அதற்குரிய மொபைல் எண்ணில் தங்கள் தேவைக்குரிய மளிகை பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் இணையதளத்தில் முகவரி இதோ: http://covid19.chennaicorporation.gov.in/covid/home/ 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments