சென்னையில் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை… ஆறுதல் செய்தி!

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (08:14 IST)
சென்னையில் நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வழக்கத்தை விட குறைந்துள்ளது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்து தற்போது தினமும் 4000 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் வரும் அளவுக்கு வந்து நிற்கிறது. தலைநகரான சென்னையில் ஆரம்பம் முதலே கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினமும் 2000 பேருக்கு மேல் புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வந்தனர். இதனால் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 68,000 ஐ தொட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக நேற்று 1713 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இது வழக்கமான எண்ணிக்கையை விட மிகவும் குறைவாகும். நேற்று மட்டும் 1000 பேருக்கு மேல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments