Webdunia - Bharat's app for daily news and videos

Install App

41 ஆயிரத்தை தாண்டிய சென்னை பாதிப்புகள்; மண்டலவாரி நிலவரம்!

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (11:02 IST)
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 1,523 ஆக உள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு சென்னையில் 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,288 பேரும், தண்டையார் பேட்டையில்  5116 பேரும், தேனாம்பேட்டையில் 4,967 பேரும், கோடம்பாக்கத்தில் 4,485 பேரும், அண்ணா நகரில் 4,385 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பல மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மணலி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் ஆயிரத்தை நெருங்கி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments