100 பேருக்கு சோதனை செய்தால் 10 பேருக்கு கொரோனா! – அதிர்ச்சியளிக்கும் சென்னை!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (11:47 IST)
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் ஊரடங்கு அமலில் இருந்தது. முக்கியமாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் மற்ற மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டபோதும் சென்னையில் கடும் ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு சென்னை வழக்கம்போல இயங்க தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ”சென்னையில் ஒரு சில மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 10 பேருக்கு கொரோனா உறுதியாகும் சூழல் உள்ளது” என கூறியுள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் மீண்டும் சென்னையில் பழையபடி கொரோனா பாதிப்பை உச்சத்தை அடையும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் குண்டு வெடிக்கும்: 2வது முறையாக வந்த மிரட்டல்..!

4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 6ஆம் வகுப்பு மாணவி.. தடயத்தை அழிக்க முயன்ற பள்ளி நிர்வாகம்..!

மனைவி, மகள், மைத்துனியை கொலை செய்த நபர்.. அதன்பின் செய்த விபரீத செயல்..!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு காத்திருக்குது மழை! - வானிலை ஆய்வு மையம்!

20 ஆண்டுகளாக பீகாரில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.. அமித்ஷாவுக்கு பிரியங்கா காந்தி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments