சென்னை அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ! – தீயணைக்கும் பணி தீவிரம்!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (13:07 IST)
சென்னை அண்ணாசாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்துள்ளன. அதில் மின்சாதன கடைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து மேலும் சில கடைகளுக்கு தீ பற்றியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடத்திற்குள் சிலர் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments