Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் காதலனை கொல்ல இந்நாள் காதலனை அனுப்பிய சென்னை கல்லூரி மாணவி

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (13:02 IST)
முன்னால் காதலனை கொலை செய்ய இந்நாள் காதலனை அனுப்பிய சென்னை கல்லூரி மாணவியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்திகா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக கோபி என்பவரை காதலித்து வந்தார். ஆனால் திடீரென இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இந்த பிரிவை தாங்க முடியாத கீர்த்தனா மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் சரத்குமார் என்பவரை கடந்த சில மாதங்களாக கீர்த்தனா காதலித்து வந்தார். இந்த நிலையில் கீர்த்தனா சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் காதலன் கோபி கேலி செய்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த கீர்த்தனா, கோபியை கொல்ல சரத்குமாரை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

காதலிக்காக கொலையும் செய்ய துணிந்த சரத்குமார் தனது நண்பர்களுடன் கத்தி,வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் கோபியை தாக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். தன்னை கொலை செய்ய சரத்குமார் வருவது தெரிந்தவுடன் உயிரை காப்பாற்றி கொள்ள கோபி ஓடியுள்ளார். ஆனால் விடாமல் துரத்திய சரத்குமார் கோஷ்டியினர், கோபி மீது வெடிகுண்டை வீசியுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததால் கோபி உயிர் தப்பினார். ஆனால் காவல்துறையினர் கொலைசெய்ய முயன்ற சரத்குமாரையும், தூண்டிவிட்ட கீர்த்தனாவையும் கைது செய்யாமல் கோபியை கைது செய்து விசாரணை செய்து வருவதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments