சென்னையில் மேலும் ஒரு ஏடிஎம்-இல் ரூ.16 லட்சம் கொள்ளை!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (07:30 IST)
சென்னையில் உள்ள எஸ்பிஎம் ஏடிஎம்களில் ஏற்கனவே கொள்ளை நடந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு ஏடிஎம்மில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை நடந்துள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் டெபாசிட் செய்யும் மெஷினிலிருந்து நூதனமான முறையில் வடமாநில கொள்ளையர்கள் சிலர் 40 லட்சம் ரூபாய் வரை கொள்ளை அடித்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து தனிப்படை அமைத்து வடமாநிலங்களில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்
 
இந்த நிலையில் சென்னை பெரியமேடு ஏடிஎம்மில் அதேபோன்ற நூதனமான முறையில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை அடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையில் பெரியமேடு எஸ்பிஐ கிளையின் மேலாளர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 190 முறை ஒரே அக்கவுண்டில் நூதன முறையில் ரூபாய் 16 லட்ச ரூபாய் திருட்டு நடைபெற்றது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments