Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Mahendran
திங்கள், 2 டிசம்பர் 2024 (16:28 IST)
சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
 
விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில்வே பாலம் மற்றும் திருக்கோவிலூர் - தண்டரை இடையே உள்ள ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சில ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் அதிவிரைவு ரயில்(20605) மாலை  4.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பவிருந்த நிலையில் இன்று விழுப்புரத்தில் இருந்து புறப்படும். சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே பகுதியாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும், ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட சென்னை எழும்பூர் - மன்னார்குடி ரயில்(16179) சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 10.55 மணிக்குப் பதிலாக 11.55 மணிக்குப் புறப்படும். 
 
பிர்சாபூர் - ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில்(20498) வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இது சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, அரக்கோணம், காட்பாடி, சேலம், கரூர், திருச்சி வழியாகச் செல்லும். தாமதமாக புறப்படும் ரயில்கள்:சென்னை எழும்பூர் - கொல்லம் அதிவிரைவு ரயில்(16101) எழும்பூரில் இருந்து இன்று மாலை 5 மணிக்குப் பதிலாக 6 மணிக்குப் புறப்படும். 
 
சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில்(22661) எழும்பூரில் இருந்து இன்று மாலை 5.45 மணிக்குப் பதிலாக 6.45 மணிக்குப் புறப்படும். சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி ரயில் எழும்பூரில் இருந்து இன்று மாலை 5.20 மணிக்குப் பதிலாக 6.20 மணிக்குப் புறப்படும்..
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments