Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றம், முன்னேற்றம், ஜெயலலிதா: ஆரோக்கியமான அரசியல் தமிழகத்தில்!

Webdunia
புதன், 25 மே 2016 (12:43 IST)
தமிழக அரசியல் களம் என்றால் அதிமுக, திமுக மோதிக்கொள்ளும், ஒருவருக்கு ஒருவர் முறைத்துக்கொண்டு இருப்பர்கள். வார்த்தை யுத்தம், அறிக்கை போர் என தமிழக அரசியல் களம் ஆரோக்கியமற்ற சூழ்நிலையிலையே இருந்து வந்தது.


 
 
ஆனால் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நகர்ந்து வருவதை பார்த்து அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவின் அனுகுமுறைகள் மிகவும் பெரிதாக பேசப்படுகிறது.
 
முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற விழாவிற்கு வருகை தந்து அசத்தினார் ஸ்டாலின், ஆனால் அவருக்கு முன்வரிசையில் இடமளிக்கப்படவில்லை. இதனையடுத்து திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.
 
ஆனால் முதல்வர் ஜெயலலிதா அதற்கு சாந்தமாக தனது பதிலை தெரிவித்தார். இருக்கை பிரச்சனை குறித்து விளக்கம் அளித்த ஜெயலலிதா தமிழகத்தின் மேம்பாட்டிற்காக செயல்படும் ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் வாழ்த்து தெரிவித்தார். இது ஜெயலலிதாவின் வழக்கமான அனுகுமுறையில் இருந்து வித்தியாசமாக பார்க்கப்பட்டது.
 
நேற்று திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதா இன்று சட்டசபை வளாகத்தில் ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்துள்ளார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்தது தமிழக அரசியலை ஆரோக்கியமான பாதைக்கு அழைத்து செல்வதின் அறிகுறியாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஜெயலலிதாவின் இந்த மாற்றம் தேர்தல் பிரச்சாரத்தின் போதே காணப்பட்டதாக கூறுகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கமாக திமுகவையும், அதன் தலைவரையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கும் ஜெயலலிதா இந்த முறை திரு.கருணாநிதி என்றே கூறி வந்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments