Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 மாவட்டங்களில் இடி, மின்ன்லுடன் மழைக்கு வாய்ப்பு

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (19:51 IST)
வங்கக் கடலில் டிசம்பர் 1ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள   நிலையில், அடுத்த 3 மணி  நேரத்தில் இடி மின்னலுடன்  கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
 
இன்று உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 29ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும், எனவே இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, டிசம்பர் 1ம் தேதி மணிக்கு 90 கி.மீ. வேகத்தை எட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மேலும்  நவம்பர் 29ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகம் வரை சூறைக்காற்று வீசும் என்றும் எனவே இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவண்னாமலை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி  நேரத்தில் இடி மின்னலுடன்  கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments