தமிழ்நாட்டில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு..! 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!!

Senthil Velan
செவ்வாய், 18 ஜூன் 2024 (15:05 IST)
தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஜூன் 22ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது எனவும் தமிழகத்தில் இன்று (ஜூன் 18) முதல் ஜூன் 21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. வரும் ஜூன் 22ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: பாதாள சாக்கடையில் விழுந்த பெண்.! ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிப்பு.!!
 
தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும், மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசலாம் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் வெளியிட்ட  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments