Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (16:55 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை , திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது, தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குபருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அ தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்று மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments