அடுத்த 3 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
புதன், 10 ஜூலை 2024 (08:39 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழைக்காலம் நடந்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஆங்காங்கே அவ்வபோது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - முன்பதிவு தொடங்கியது

ஆம்னி பேருந்து தீ விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நிதியுதவி அறிவிப்பு

பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்.. கையில் எழுதி வைத்து தற்கொலை.

கரூர் துயர சம்பவம்.. 41 குடும்பத்தினர்களை சென்னையில் சந்திக்கின்றாரா விஜய்?

நண்பன் என்றால் நண்பனாக இருப்போம், துரோகி என்றால் காலில் மிதிப்போம்: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments