Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து 2 தற்கொலைகள்! தண்டவாளமா? தற்கொலை மையமா? - உளுந்தூர்பேட்டையில் அதிர்ச்சி!

Prasanth Karthick
வியாழன், 21 நவம்பர் 2024 (10:15 IST)

உளுந்தூர்பேட்டை ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து அடுத்தடுத்து இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நேற்று இரவு 10 மணியளவில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சென்னை - திருச்சி மார்க்கமாக ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்தபோது ஆசாமி ஒருவர் திடீரென ரயிலின் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ரயில் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இதுகுறித்து விருதாச்சலம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் இறந்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த முகமது ரபீக் என தெரிய வந்துள்ளது.

 

இந்த அதிர்ச்சி மறைவதற்குள் அதே தண்டவாளத்தில் 100 மீட்டர் தொலைவில் அடையாளம் தெரியாத 55 வயது முதியவர் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை முயன்ற நிலையில் ரயில் மோதி தலைத் துண்டாகி இறந்துள்ளார். அவரது அடையாளங்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த தற்கொலை சம்பவங்கள் உளுந்தூர்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments