"மத்திய அமைச்சராகிறார் வைத்தியலிங்கம்" ஓவர்.. ஓவர்...!
"மத்திய அமைச்சராகிறார்" வைத்தியலிங்கம்
மத்திய அரசில் அதிமுக பங்கு கொள்ளும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் வைத்தியலிங்கதிற்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நடைபெற்றது வருகிறது. பாஜக அரசுக்கு ராஜ்யசாபாவில் போதிய ஆதரவு இன்மை காரணமாக தடுமாறியது. அப்போது அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்தது. இதனால், அதிமுகவுக்கு மத்தியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவி கொடுத்தது.
மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்தின் போது, அதிமுகவும் இடம் பெறும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் வெற்றி பெற்ற அதிமுக மத்திய அரசை அனுசரித்து செல்ல முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மத்தியஅரசின் நிதி அதிக அளவில் கிடைக்கும் என்றும், மத்தியில் அமைச்சரவையில் இடம் பெற்றால், கட்சியையும், ஆட்சியையும் வளப்படுத்தமுடியும் என முதல்வர் ஜெயலலிதா நம்புகிறார்.
இவ்வாறு அதிமுக மத்திய அரசில் இடம் பெற்றால், தமிழகத்தில் மத்திய அமைச்சராக வைத்தியலிங்கத்திற்கு வாய்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக எம்பிக்கள் பலர் மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளது.
இதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவின் டெல்லி பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.