Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100வது பிறந்த நாளை கொண்டாடும் நல்லகண்ணு.. கமல்ஹாசன் வாழ்த்து

Siva
வியாழன், 26 டிசம்பர் 2024 (09:35 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் இன்று தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

நூறாண்டு காணும் தொண்டு.

எல்லோரும் சமமென்னும் காலம் வரவேண்டும்; நல்லோர் பெரியர் என்னும் காலம் வரவேண்டும் என்பது பாரதியின் கனவு. அதன் நனவான வடிவமே மாபெரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் வாழ்வு.

சமூகத்தில் சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் மொத்தத்தையும் அர்ப்பணித்து, அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார் ஐயா.

இப்படி ஒருவர் இருக்க இயலுமா என்று வியக்கும் வண்ணம் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பெருந்தகை தோழர் நல்லகண்ணு எளியோரின் வாழ்த்துப்படி நூறாண்டு காண்கிறார்.

அவருக்கு என் வாழ்த்து என்று கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பிறந்த நல்லகண்ணு இன்று தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 1943ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அமைப்பு ரீதியாக செயல்பட தொடங்கிய நல்லக்கண்ணு அவர்கள் 80 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பெருமைக்குரியவர் ஆவார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் மீது குண்டுமழை பொழிந்த பாகிஸ்தான்! போர் உருவாகும் சூழல்?

100வது பிறந்த நாளை கொண்டாடு நல்லகண்ணு.. கமல்ஹாசன் வாழ்த்து

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. எஃப்.ஐ.ஆரில் உள்ள அதிர்ச்சி தகவல்..!

20 ஆண்டுகள் ஆனாலும் ஆறாத வடு! சுனாமி நினைவு தினம்! - கடற்கரையில் அஞ்சலி!

டிசம்பர் 27ஆம் தேதி தமிழகம் வரவிருந்த அமித்ஷா திட்டம் ரத்து; ஜனவரிக்கு ஒத்திவைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments