Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் திருமா கோரிக்கை

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (03:01 IST)
சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
தலித் இயக்க மூத்த தலைவர்களின் ஒருவரான 'தாத்தா' ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. சென்னை ஓட்டேரியில் உள்ள ரெட்டைமலை சீனிவாசன் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
 
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் பல சந்தேகங்கள் உள்ளது. எனவே, தமிழக காவல்துறை விசாரிக்க கூடாது. இதனால், சுவாதி கொலை வழக்கில் உள்ள பின்னணியில் உள்ள மர்மங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர சிபிஐ விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், பாதிக்கப்பட்ட சுவாதியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். சுவாதி குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் எலும்புக்கூடு.. நோக்கியா போனை வைத்து இறந்தவர் அடையாளம் கண்டுபிடிப்பு..!

டெஸ்லா கார் முதல் ஷோரூம் இன்று இந்தியாவில் திறப்பு: மாடல் Y கார் பற்றிய விவரங்கள்!

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments