Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி, ஸ்டெர்லைட் விவகாரம்; திரைத்துறையினர் நடத்திய மவுன போராட்டம் நிறைவுற்றது

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (13:43 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற அறவழிப் போராட்டம் நிறைவுற்றது.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம் வரும் ஏப்ரல் 8-ந் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது என்றார்.
 
அதன்படி இன்று காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில், நடிகர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் அறவழிப் போராட்டம் தொடங்கியது.
 
நடிகர்கள் கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், கார்த்தி, பார்த்திபன், சிவகுமார், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும், இசையமைப்பாளர் இளையராஜா, வைரமுத்து, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தாணு, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
 
மதியம் 1 மணியளவில் திரைத்துறையினர் நடத்திய அறவழிப் போராட்டம் நிறைவுபெற்றது. மேலும் முக்கிய கோரிக்கைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

இளம்பெண்ணை துரத்தி வெட்டிய முதியவர்.. அலறிக் கொண்டு ஓடிய பெண்! - அதிர்ச்சி வீடியோ!

கடலில் கவிழ்த்த கப்பல்.. அரபிக்கடலில் பரவும் கந்தக எரிப்பொருள்! - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

பெங்களூரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்..!

கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்! சுற்றுலா தளங்கள் மூடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments