Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரிக்காக உண்ணாவிரதம், கடையடைப்பு: தனித்தனியாக போராடும் அமைப்புகள்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (16:58 IST)
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், குறைந்தபட்சம் ஒரு விளக்கம் கூட அளிக்காமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. இருப்பினும் இந்த போராட்டங்கள் ஒரே குரலாக இல்லை என்பதே பலரது ஆதங்கமாக உள்ளது. இதிலும் அரசியல் செய்யும் வகையில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நாளில் தனித்தனியாக போராட்டங்களை அறிவித்துள்ளது.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடிய  திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்று காவிரி மேலாண்மை வாரியத்திற்காக சில தீர்மானங்கள் இயற்றப்பட்டது. அதேபோல் அதிமுக சார்பிலும் ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்புமணி தலைமையில் இன்று நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் ஏப்ரல் 11ல் கடையடைப்பு என முடிவு  செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் மருந்து கடைகள் ஏப்ரல் 2ஆம் தேதி மூடப்படும் என்றும் மருந்துக்கடைகள் சங்கம் அறிவித்துள்ளது.

இப்படி தனித்தனியாக ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு நாளில் போராட்டம் நடத்தாமல் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொடர் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

நடுவரின் தவறான தீர்ப்பு.. கால்பந்து போட்டியில் கலவரம்.. 100 பேர் பரிதாப பலி..!

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments