காவிரி விவகாரம் : கரூரில் பதுங்கி ஒளிந்த அரசியல் கட்சியினர்
காவிரி விவகாரம் : கரூரில் பதுங்கி ஒளிந்த அரசியல் கட்சியினர்
கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 15 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்திரவிட்டதையடுத்து கடந்த 7 தினங்களாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது.
மேலும், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ் அப், பேஸ் புக்கில் பகிர்வதும் என்றும் தமிழர்களின் கார்கள், லாரிகள், பேருந்துகள் உடைத்தெரியப்படுவதும், ஆங்காங்கே தமிழர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி விடுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினையில் அம்மாநில முதல்வர் சீத்தாராமையா மவுனம் காக்கிறார்.
கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையாவின் உருவபொம்மையை கரூரில் முதல் முறையாக கரூர் மாவடியான் கோயில் தெருவில் உள்ள சிறுவர்கள் எரித்ததுடன், அவரின் உருவ பொம்மையை செருப்பாலும், விளக்கமாற்றாலும் அடித்தும் தங்களது உணர்வை வெளிக்காண்பித்தனர்.
முழுக்க முழுக்க இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் நடத்திய இந்த உருவ பொம்மை எரிப்பு சம்பவம் உண்மை தமிழ் உணர்வையும், தமிழர்கள் என்ற உணர்வையும் வெளிக்காட்டியது.
இந்த விவகாரத்தில் மற்ற அரசியல் கட்சியினர் மவுனம் காத்த நிலையில் சிறுவர்கள் போட்டு உடைத்த இந்த உருவ பொம்மை எரிப்பு சம்பவம் மிகுந்த வரவேற்பை தமிழர்களிடையே பெற்றுள்ளது.