Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி வழக்கு: இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை

Webdunia
திங்கள், 14 மே 2018 (07:39 IST)
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதை அடுத்து இன்றாவது தமிழக விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தமிழகமும் உள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கில் இன்று செயல் திட்ட அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக தேர்தல் காரணமாக ஒருசில காரணங்களை கூறி நாட்களை கடத்தி வந்த மத்திய அரசு, தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால் இன்றைய விசாரணையின்போது செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக மூத்த தலைவர்களின் பேச்சுக்கள் இதனை உறுதி செய்துள்ளது.
 
மேலும் மத்திய நீர்வளத்துறை செயலாளார் யூ.பி.சிங் இன்று சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராவார் என்றும், அவர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் காவிரி குறித்த செயல் திட்ட வரைவை தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கர்நாடக அரசு இன்னும் தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடவில்லை. இதுகுறித்தும் சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இன்று நீதி கிடைக்குமா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments