Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : ஆம் ஆத்மி கோரிக்கை

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (17:50 IST)
விருத்தாச்சலம் தொகுதியில் ஜெயலலிதா கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் சிக்கி இரண்டு பேர் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி தனது கருத்தை தெரிவித்துள்ளது.


 

 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்ட விருத்தாசலம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் வெயிலில் மயங்கிய நேற்று இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், கடலுார், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் வந்த தொண்டர்கள், காலை முதல், சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்தனர். 
 
முதல்வர் ஜெயலலிதா பேசத் துவங்கிய சற்று நேரத்தில், வெயில் கொடுமை காரணமாக சிலர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து, கூட்டத்திலிருந்து மக்கள் வெளியேற முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது என்று தெரிகிறது. 
 
மேலும் அதில் 15க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து காயமடைந்தனர். இந்த சம்பவத்தினால் கூட்டத்தில் பதற்றம் நிலவியது. ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்ததால் மயக்கம் அடைந்தவர்களை, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. 
 
பின், ஒரு வழியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிதம்பரத்தைச் சேர்ந்த கருணாகர டேவிட், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் இறந்தனர். 
 
மக்களை மதிக்காமல் கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வைத்து எந்த வித மருத்துவ மற்றும் பாதுகாப்பு வசதியையும் செய்யாமல் இருப்பதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் ஜெயலலிதா போகும் இடங்களில் நடக்கிறது. 
 
இதுபோன்ற கூட்டத்தில் போலீசாரின் கவனம் முழுவதும் ஜெயலலிதாவை கவனிப்பதிலேயே குவிகிறது. எனவேதான் மக்களை கண்காணிப்பதில் கவனச்சிதறல் ஏற்பட்டு இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 
 
இதற்கு மாநில முதல்வர் ஜெயலலிதா பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் ஆம் ஆத்மி கோரிக்கை வைக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சல்! கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி! திரைப்படத்தை மிஞ்சம் நிஜக்கதை!

Show comments