பெண்கள் சென்ற காரை வழி மறித்தவர்கள் மீது வழக்குப்பதிவு.. குற்றவாளிகளை தேடும் தனிப்படைகள்

Siva
புதன், 29 ஜனவரி 2025 (16:05 IST)
சென்னை ஈ சி ஆர் சாலையில் இரவு நேரத்தில் பெண்கள் காரில் சென்ற போது அவர்களை வழிமறித்து மிரட்டிய திமுக கொடி  ஏந்திய காரில் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் சென்ற காரை திடீரென திமுக கொடி ஏற்றிய கார் வழி மறித்ததாகவும் அந்த காரில் இருந்தவர்கள் பெண்களை மிரட்டியதாகவும் வீடியோ ஒன்று வெளியானது.

இந்த வீடியோவின் அடிப்படையில் இது குறித்து அதிமுக ஆவேசமாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் போலீசார் தற்போது இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண்கள் சென்ற காரை வழிமறித்து மிரட்டியவர்கள் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்த காரில் இருந்தவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சிசிடிவி காட்சியை வைத்து கார் எண்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அதனை அடுத்து அந்த காரில் இருந்த இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது விரைவில். அந்த காரில் இருந்த அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments