Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நில மோசடியில் சிக்கிய மதுசூதனன் - ஓ.பி.எஸ் அணிக்கு சிக்கல்

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (15:30 IST)
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் மது சூதனன் இரட்டை மின் கம்ப சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே அமைச்சராகவும், ஆர்.கே.நகர் தொகுதியில் எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார். மேலும், அந்த பகுதியிலேயே கடந்த 40 வருடங்களுக்கும் மேல் அவர் வசித்து வருகிறார். வருகிற ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல்  நடைபெறவுள்ளது. எனவே, மது சூதனனுக்கு ஆதரவாக ஓ.பி.எஸ் அணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
 
இந்நிலையில், வியாசர்பாடியைச் சேர்ந்த பழனி என்பவர் மதுசூதனின் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், 1995ம் ஆண்டு, மதுசூதனன் அமைச்சராக இருந்த போது, கே.கே.நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு நிலத்தை அவர் போலி ஆவணங்கள் மூலம் அவர் அபகரித்து விட்டதாக அவர் புகார் கூறியுள்ளார்.
 
இந்த விவகாரம் ஓ.பி.எஸ் தரப்பிற்கு பின்னடையை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments