Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா வெற்றியை எதிர்த்த வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (14:50 IST)
முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, தொடரப்பட்ட வழக்கில், மத்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

 
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில், அந்த தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான பிரவீணா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
 
அதில், தேர்தலின்போது, தான் வாக்கு சேகரிப்பதற்கு சரியான அல்லது சமமான வாய்ப்பு அளிக்கப்படவில்லை; அதிகாரிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டனர் என பிரவீணா குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்த வழக்கு நேற்று செவ்வாயன்று நீதிபதி எம். துரைசாமி, அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரவீணா மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments