Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாண கார்டூனிஸ்ட்டுக்கு குடியரசு தலைவர் விருது; நீதிபதியின் முகநூல் பதிவு!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (17:36 IST)
முதல்வரை நிர்வாணமாக வரைந்த கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தனது முகநூல் பக்கத்தில் கார்டூனிஸ்ட்டுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கியது குறித்து பதிவிட்டுள்ளார். 


 

 
நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக அரசை சாடும் வகையில் கார்டூன் ஒன்றை பாலா பதிவிட்டார். அந்த கேலி சித்திரத்தில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் தமிழக முதல்வர் நிர்வாணமாக நிற்பது போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தது.
 
இதற்காக நேற்று கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
 
1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலைமையின் போது, குடியரசுத்தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமதுவை, கார்டூனிஸ்ட் அபுஅப்ரஹாம் நிர்வாணமாக கார்டூனில் சித்திரித்தார். அந்த கேலி சித்திரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியானது. 
 
கார்டூனிஸ்ட் அபுஅப்ரஹாமை கைது செய்ய வேண்டும் என ஆளும் கட்சியினர் தரப்பில் குரல்கள் எழும்பியது. ஆனால் சர்வதேச கண்டனத்திற்கு அஞ்சி அவர் கைது செய்யப்படவில்லை. பின்னர் கார்டூனிஸ்ட் அபுஅப்ரஹாமுக்கு குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது.
 
இதை அவர் அபுஅப்ரஹாம் வரைந்த கேலிசித்திரத்துடன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments