Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் – விஜயகாந்தின் தாமதம்?

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (15:06 IST)
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உயர் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி அமெரிக்காவிற்குச் சென்றார். விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா மற்றும் இளைய மகன் சண்முக பாண்டியனும் அமெரிக்காவிற்கு சென்றனர்.

அங்கு அவருக்கு சிறுநீரகம் சம்மந்தப்பட்ட சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டதாகவும் அதையடுத்து இன்று அவர் சென்னைத் திரும்பவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அதையடுத்து இன்று அதிகாலை 12 மணிக்கே அவர் பயணம் செய்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

ஆனாலும் விஜயகாந்த் நண்பகல் 12 மணிக்கே விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். விஜயகாந்த் வந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் நள்ளிரவில் இருந்து நண்பகல் வரை அவருக்காகக் காத்திருந்தனர். 12 மணிநேரமாக விஜயகாந்த் விமான நிலையத்தில் என்ன செய்தார் என விசாரித்ததில் ‘ பயணக்கலைப்பு காரணமாக விஜயகாந்தை இரவு விமான நிலையத்திலேயே தங்கவைத்த்துள்ளனர். கலைப்பில் உறங்கியவர் காலை 11 மணிக்கே எழுந்திருக்கிறார். அதன் பின்னே அவர் பேட்டரி கார் மூலம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்’ என்ற தகவல் கிடைத்துள்ளது.

இன்னும் சில ஓய்வு எடுத்தபின் மீண்டும் அரசியல் பணிகளில் விஜயகாந்த் ஈடுபடுவார் என தேமுதிக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments