பூம்புகார் கல்லூரிக்கு விடப்பட்ட விடுமுறை ரத்து- கல்லூரி முதல்வர்

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (14:44 IST)
சீர்காழி அடுத்துள்ள மேலையூரில் இந்து சமய அற  நிலையத்துறைக்குச் சொந்தமான பூம்புகார் அரசுக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் அப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தக் கல்லூரியில், குடிநீர், சாலை, கழிப்பறை, உள்ளிட்ட அடிபப்டை வசதிகள் இல்லாததாலும், வகுப்பறை இருக்கைகள், ஆய்வுக்கூடம், உள்ளிட்ட வசதிகள் செய்து தராத கல்லூரி முதல்வர் அறிவொளியை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக  மாணவர்கள் அறிவித்து கல்லூரி வாயிலில்  அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

எனவே  இன்று முதல்( 15,16,17) அடுத்த  மூன்று  நாட்களுக்கு விடுமுறை அறிவித்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பூம்புகார் அரசுக் கல்லூரிக்கு விடப்பட விடுமுறையை ரத்து செய்து தற்போது கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

நாளை முதல் வழக்கம்போல் வகுப்புகள் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments