Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு ரயில்சேவைகள் ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (15:41 IST)
தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகளிலிருந்து போதிய பயணிகள் வருகை இல்லாததால் சில  ரயில்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம்  அறிவித்துள்ளது

. உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

முன்பை விட தற்போது கொரோனா பரவலில் வேகம் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்குச் செல்வது குறைந்துள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகளிலிருந்து போதிய பயணிகள் வருகை இல்லாததால் 12 ரயில்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம்  அறிவித்துள்ளது.

 இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதாவது:

ராமேஸ்வரம் – கன்னியாகுமரி; கோவை – பெங்களூர் ; கோவை- சென்னை செண்ட்ரல் உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

முஸ்லீம் என்பதால் கொலை செய்தேன்.. 10 ஆண்டுகள் காதலித்த பெண்ணை கொலை செய்த வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments