காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேற்பார்வை குழுவில் தமிழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, காவிரி மேற்பார்வை குழுவின் கூட்டம் புதுடெல்லியில் முடிவடைந்ததும் அக்குழுவின் தலைவர் சஷி சேகர் கூறியதாவது,“ கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து தற்போது வரையிலான 9 ஆண்டுகளில் பெய்த மழையின் அளவு, அந்த ஆண்டு அணைகளில் இருந்த தண்ணீரின் அளவு, பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் அளவு உள்ளிட்ட அனைத்து புள்ளி விவரங்களையும் தருமாறு கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களை கேட்டு இருக்கிறோம்.
அவை அனைத்தையும் 15-ந் தேதிக்குள் 4 மாநிலங்களும் தரவேண்டும். அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் மத்திய நீர்வளத்துறை ஆய்வு செய்யும். அதன் பிறகு 19-ந் தேதி மீண்டும் இந்த கூட்டத்தை கூட்ட முடிவு செய்திருக்கிறோம். அன்றைய தினம் இறுதி முடிவு எடுக்கப்படும்.” என்றார்.