Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளிகளில் சாதி பெயர் இருக்கலாமா? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!!

Senthil Velan
வெள்ளி, 26 ஜூலை 2024 (13:21 IST)
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சாதி பெயரை பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

கல்வராயன் மலை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. 
 
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கல்வராயன் மலை பகுதி தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. மலைப்பகுதிகளில் 150 பள்ளிகளில் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அங்கு அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா? என நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். தெருக்களில் உள்ள சாதி பெயரை மாற்றியது போல அரசு  பள்ளிகளில் உள்ள சாதி பெயரையும் நீக்கி விடுங்கள் என்று நீதிபதி அறிவுரை வழங்கினார்.

ALSO READ: கணவரை கொன்று நாடகமாடிய மனைவி.! 4 மாதங்களுக்குப் பின் கைது..!!
 
மேலும் மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு பள்ளிகளில் சாதி பெயர் இருக்கலாமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை  ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமரியாதை செய்வதா? டாக்டர் ராமதாஸ் ஆவேசம்.!

விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து இல்லை.. ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து: விஜய்யின் ஓரவஞ்சனை

ஒரு நாளில் 1000 மிஸ்டு கால்.. காதலனுக்கு டார்ச்சர்! - கம்பி எண்ணும் காதலி!

அண்ணா மடியில் 3வயதில் உட்கார்ந்தவன் நான்: கமல்ஹாசனின் நெகிழ்ச்சி பதிவு..!

வன்கொடுமை செய்து அந்தரங்க உறுப்பில் கண்ணாடியை திணித்த ராணுவ அதிகாரி! பெண் பரபரப்பு புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments