Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்ஆர்எம் கல்லூரியில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கவனத்திற்கு!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:11 IST)
எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.


 

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக மாணவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வேந்தர் மூவிஸ் மதன், ஜூன் மாதம் மாயமானார்.

மதனை ஆஜர்படுத்தக் கோரி அவரது தாயார் தங்கம் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 20ம் தேதி மதன், திருப்பூரில் கைது செய்யப்பட்டதால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே எஸ்ஆர்எம் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி, மாணவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதன் வேந்தர் பச்சமுத்து மற்றும் மதன் ஆகியோருக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி மாணவர்களின் பெற்றோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது நேற்று வியாழக்கிழமை தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், பாஸ்கரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”மதன் மீதான மோசடி வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த குழுவில் சுதாகர், லலிதா லட்சுமி ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, விசாரணை சரியாகத்தான் செல்கிறது. எனவே விசாரணையை வேறு அமைப் புக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும், பச்சமுத்து தரப்பில் ரூ. 75 கோடி விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டுள்ளது. எனவே பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments