Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே நகரில் இன்று காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு ஆரம்பம்

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (07:41 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர்களுடன் போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எம்.எல்.ஏ வாக இருந்த தொகுதி ஆர்.கே நகர். அவர் இறந்த பின்பு காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம், ஆர்.கே நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடாவின் காரணமாக அந்நேரத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆர்.கே நகருக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இருப்பினும் பல்வேறு கட்சிகளின் பணப்பட்டுவாடாவின் காரணமாக இத்தேர்தலை நிறுத்தக் கோரி கோவையை சேர்ந்த முஹமது ரபீக் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதுமன்ற நீதுபதிகள் ஆர்.கே நகர் இடைத்தேர்தலை நிறுத்த முடியாதென்றும், தேர்தலை நியாயமான முறையில் நடத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்..
 
இதனையடுத்து வாக்குப்பதிவின்போது எந்தவித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பதை கணக்கில் கொண்டும், அமைதியாக தேர்தலை நடத்தும் வகையிலும் வாகுப்பதிவை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் ஆர்.கே நகர் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு இத்தேர்தலின் முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை(டிசம்பர் 24-ந் தேதி) வெளியாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments