பஸ் கண்டக்டர்களுக்கு கொரோனா தொற்று! – பேருந்து சேவை நிறுத்தம்!

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (10:48 IST)
திருவண்ணாமலையை சேர்ந்த பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் தளர்வுகள் பல அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை செய்யாறு பகுதியிலும் பேருந்துகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் செய்யாறு பேருந்து பணிமனையின் கீழ் பணிபுரியும் நடத்துனர்கல் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் செய்யாறு பணிமனை மூடப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு செய்யாறு பகுதியில் பேருந்துகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments